209. சிவக்கொழுந்தீசர் கோயில்
இறைவன் சிவக்கொழுந்தீசர்
இறைவி ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி
தீர்த்தம் ஜாம்பவ தீர்த்தம்
தல விருட்சம் கொன்றை மரம்
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருத்திணை நகர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'தீர்த்தனகிரி' என்று அழைக்கப்படுகிறது. கடலூர் - சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம் சென்று, அங்கிருந்து புதுச்சத்திரம் சாலையில் மேட்டுப்பாளையம் என்று இடத்தில் இருக்கும் 'தீர்த்தனகிரி' கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் செல்ல வேண்டும். அங்கிருந்து 5 கி.மீ. சென்று தானூர் கிராமத்தை அடைந்து பின்னர் மேற்கே 1 1/2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். முக்கிய சாலையில் இருந்து பிரிந்து ஒரே சாலையில்தான் செல்ல வேண்டும் என்றாலும் சற்று கடினமாக இருப்பதால் விசாரித்துக் கொண்டு செல்லவும்.
தலச்சிறப்பு

Tirthanagiri Gopuramபெரியான் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் தமது நிலத்தை உழுது கொண்டிருக்கையில் சிவபெருமான் ஜங்கமர் வேடங்கொண்டு வந்து 'தமக்கு பசிக்கிறது உணவு கொடு' என்று கேட்டார். பெரியானும் அவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, தான் உணவு கொண்டுவரச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் இறைவன் அவனது நிலத்தை உழுது, தினை விளைக்கச் செய்தார். திரும்பி வந்த பெரியானும் அவனது மனைவியும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து, ஜங்கமரைத் தேடினார். அவர் மறைந்து மறையவனாகத் தோன்றி காட்சி அளித்து அருளினார். தினை அதிசயமான வளர்ந்த காரணத்தால் இவ்வூர் திருத்தினை நகர் என்று பெயர் பெற்றது.

Tirthanagiri Natarajarஇதனால் இத்தலத்து இறைவனுக்கு தினை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பெரியானுக்கும், ஜங்கமருக்கும் கோயிலில் உருவங்கள் உள்ளன. வீரசேன மன்னன் இக்கோயில் தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வணங்கியபோது, வெண்குஷ்டம் நீங்கியமையால் அவனே இந்தக் கோயிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. சிறிய கோயில். மூலவர் சிறிய லிங்கம். சுயம்பு திருமேனி. சதுர ஆவுடை. பாணம் சற்று கூர்மையாக உள்ளது. அம்பினை சுமார் 5 அடி உயரத்துடன் அழகாக காட்சி தருகிறார். இக்கோயிலில் உள்ள நடராஜப் பெருமானின் கீழே ஒரு பக்கத்தில் திருமால் சங்கு ஊதியபடியும், மற்றொரு பக்கத்தில் பிரம்மா முரசு முழங்கியபடியும் இருக்கும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.

Tirthanagiri Praharamசுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 வரையிலும் நடை திறந்திருக்கும். பௌர்ணமி அன்று கிராம மக்கள் கோயிலை வலம்வந்து வணங்குகின்றனர். அதனால் அன்றுமட்டும் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு : 94434 34024.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com